கொழும்பில் பிரபல ஊடகவியலாளர் வீடொன்றுக்குள் மர்ம நபர்கள் தொடர்பில் விசாரணைகள் ஆரம்பிக்கப்பட்டுள்ளதாக, பொலிஸ் ஊடகப் பேச்சாளர் பிரதி பொலிஸ் மா அதிபர் நிஹால் தல்துவ தெரிவித்துள்ளார்.
பிலியந்தல வெவல கேம்பிரிட்ஜ் கோர்ட் வீட்டுத் தொகுதிக்குள் நுழைய முயன்ற இனந்தெரியாத இருவர் தொடர்பில் தகவல் வெளியாகியுள்ளது.
குறித்த வீட்டு தொகுதிக்குள் உட்பிரவேசிக்க முயன்றவர்கள் தொடர்பில் சந்தேகம் அடைந்து விசாரணைகளை மேற்கொண்ட போது உரிய பதிலை வழங்கவில்லை. கேள்வி கேட்ட வீட்டுத்தொகுதியின் பாதுகாவலரை சந்தேக நபர்கள் புகைப்படம் எடுத்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
குறித்த அடுக்குமாடி குடியிருப்பில் வசிக்கும் ஊடகவியலாளர் சமுதித சமரவிக்ரமவிற்கு ஏற்கனவே ஏற்பட்ட பாதுகாப்பு அச்சுறுத்தல் காரணமாக பாதுகாப்பு பிரிவினால் ஆயுதங்கள் வழங்கப்பட்ட 2 பொலிஸ் உத்தியோகத்தர்கள் பாதுகாப்பிற்கு வழங்கப்பட்டுள்ளனர்.
இந்த நிலையில் 2 இனந்தெரியாத நபர்கள் வந்துள்ளதாக கட்டடத்தின் பாதுகாப்பு அதிகாரி தொலைபேசி மூலம் குறித்த பொலிஸ் அதிகாரிகளுக்கு தெரிவித்துள்ளார்.
இதனையடுத்து பொலிஸார் சம்பவ இடத்திற்கு வருவதற்குள் அவர்கள் அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர். கடந்த 2 வருடங்களுக்கு முன்னர், ஊடகவியலாளர் சாமுதித சமரவிக்ரமவின் வீட்டின் தாக்குதல் நடத்தப்பட்டதுடன், இதுவரை சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.
நேற்று முன்தினம் இரவு இடம்பெற்ற சம்பவம் தொடர்பில் சாமுதித சாமர விக்கிரம பொது பாதுகாப்பு அமைச்சர் டிரான் அலஸ், கல்கிசை பிரிவு சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர் பிரசன்ன பிராமண மற்றும் பிலியந்தலை பொலிஸ் பரிசோதகர் தினேஷ் அத்தரகம ஆகியோருக்கு தொலைபேசியில் தெரியப்படுத்தியுள்ளார்.