ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இன்று (22) மட்டக்களப்பிற்கு விஜயம் செய்யவுள்ளதாகக் கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தெரிவித்துள்ளார்.
மேலும் ஜனாதிபதியின் வருகை தொடர்பில் ஆராயும் விசேட கூட்டம் மட்டக்களப்பு மாவட்ட செயலகத்தில், கிழக்கு மாகாண ஆளுநர் செந்தில் தொண்டமான் தலைமையில் நடைபெற்ற போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
இந்த விஜயத்தின் போது ஜனாதிபதி பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார்.