Search
Close this search box.
வவுனியாவில் இடம்பெற்ற 34வது தியாகிகள் தினம்.

ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் 34 வது தியாகிகள் தினம் இன்று வவுனியாவில் உணர்வு பூர்வமாக நினைவு கூரப்பட்டது.

வவுனியா நகர மத்தியில் அமைந்துள்ள ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் செயலாளர் நாயகம் பத்மநாபா அவர்களின் திருவுருவ சிலைக்கு ஈழ மக்கள் புரசிகர விடுதலை முன்னணியின் செயலாளரும் முன்னாள் வன்னி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினருமான சிவசக்தி ஆனந்தன் அவர்களால் மாலை அணிவிக்கப்பட்டு நிகழ்வு ஆரம்பமானது.

அதனை தொடர்ந்து ஈழ மக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் வவுனியா மாவட்ட அலுவலகத்தில் மலரஞ்சலி நிகழ்வும் நினைவு பெருரையும் இடம் பெற்றது.

இன் நிகழ்வில் முன்னாள் வடக்கு மாகாணசபை உறுப்பினர்களான இந்திரராசா, தியாகராசா மற்றும் வவுனியா நகர சபையின் முன்னாள் தலைவர் கௌதமன் மற்றும் உள்ளூராட்சி மன்ற உறுப்பினர்கள், கட்சியின் அரசியல் உயர்பீட உறுப்பினர்கள் மத்தியகுழு உறுப்பினர்கள் , மாவட்ட கட்சி உறுப்பினர்கள் பொதுமக்கள் என பலரும் கலந்து கொண்டனர்.

Sharing is caring

More News