வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட கைக்குண்டுடன் மீனவர் ஒருவர் கைது செய்யப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இச் சம்பவம் கிரந்துருகோட்டை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட உள்ஹிட்டிய பகுதியில் இடம்பெற்றுள்ளது.
குறித்த பகுதியில் நபர் ஒருவர் கைக்குண்டு வைத்திருப்பதாக கிரந்துருகோட்டை பொலிஸாருக்கு கிடைக்கப்பெற்ற இரகசிய தகவலுக்கு அமைய குறித்த பகுதிக்கு சென்று சோதனை மேற்கொண்ட போது கைக்குண்டு மீட்கப்பட்டுள்ளதாக பொலிஸார் தெரிவித்தனர்.
இவ்வாறு கைது செய்யப்பட்ட நபர் உள்ஹிட்டிய கிரந்துருகோட்டை பகுதியை சேர்ந்த 27 வயதுடைய மீனவர் எனவும் தெரிவிக்கப்படுகிறது.
இந்நிலையில் குறித்த சந்தேக நபரிடம் விசாரணைகளை மேற்கொண்டதன் பின்னர் நீதிவான் நீதிமன்றதாதில் ஆஜர் படுத்துவதற்கான நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாக பொலிஸார் தெரிவித்தனர்.