Search
Close this search box.
காத்தான்குடியில் இளந்தாய் மீது நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு: சந்தேகநபர் கைது

வீடொன்றில் மகனுடன் வசித்து வந்த பெண் ஒருவர் மீது துப்பாக்கி சூடு நடத்திவிட்டு சந்தேகநபர் தப்பி சென்றிருந்த நிலையில் காத்தான்குடி காவல்துறையினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

குறித்த துப்பாக்கி சூடு மட்டக்களப்பு (Batticaloa) – காத்தான்குடி காவல்துறை பிரிவிலுள்ள புதிய காத்தானகுடி மீன்பிடி இலாஹா வீதி அஹமட் வீதியில் வெள்ளிக்கிழமை (14) இடம்பெற்றது.

இதன் போது, வீட்டில் வசித்த இளந்தாய் காயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

இந்த சம்பவத்தில் சித்தீக் சிபானியா (வயது32) என்பவரே காயமடைந்துள்ளதுடன் பெண்ணின் கணவர் அவுஸ்திரேலியா (Australia) நாட்டில் தற்போது இருப்பதாகவும் இவர் ஒரு மௌலவி எனவும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

மேலும், காத்தான்குடி காவல்துறையினர் சம்பவ இடத்தில் உள்ள சி.சி.ரி.வி‌ கமராக்களையும் சோதனை செய்து சந்தேக நபர் அடையாளம் கண்டு சந்தேக நபரை மாலை ஆரையம்பதி செல்வா நகர் கிழக்கிலுள்ள வீடொன்றில் வைத்து கைது செய்துள்ளனர்.

அத்துடன், காயமடைந்த பெண்ணின் வீட்டில் தடவியல் காவல்துறையினர் பிரிவினர் மேற்கொண்ட சோதனைகளில் துப்பாக்கி ரவைகள் மீட்கப்பட்டுள்ளன.

இந்த நிலையில், பெண் மீது மேற்கொள்ளப்பட்ட துப்பாக்கி சூடு சம்பவம் தொடர்பாக மேலதிக விசாரணைகளை காத்தான்குடி காவல்துறையினர் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News