Search
Close this search box.
இலங்கையில் மொத்த உள்நாட்டு உற்பத்தியில் ஏற்பட்டுள்ள மாற்றம்

2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், நாட்டின் மொத்த உள்நாட்டு உற்பத்தியின் வளர்ச்சி 5.3% ஆக பதிவாகியுள்ளது.

மக்கள் தொகைக் கணக்கெடுப்பு மற்றும் புள்ளிவிபரத் திணைக்களம் விடுத்துள்ள அறிக்கையில் இந்த விடயம் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதன்படி, நிலையான விலையில் 2023 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,161,963 மில்லியன் ரூபாவாக பதிவான மொத்த உள்நாட்டு உற்பத்தியானது 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில் 3,329,583 மில்லியன் ரூபாவாக பதிவாகியுள்ளது.

மேலும், 2024 ஆம் ஆண்டின் முதல் காலாண்டில், விவசாயம், தொழில்துறை மற்றும் சேவைப் பொருளாதார நடவடிக்கைகள் முறையே 1.1%, 11.8% மற்றும் 2.6% வளர்ச்சியைப் பதிவு செய்துள்ளன.

Sharing is caring

More News