2023/2024 ஆம் கல்வியாண்டுக்கான பல்கலைக்கழக அனுமதிக்கான விண்ணப்பங்கள் கோரப்பட்டுள்ளன.
இதன்படி, நாளை(14) முதல் இணையம் மூலம் விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும் என பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழு அறிவித்துள்ளது.
இதன்படி, நாளை காலை 6:00 மணி முதல் www.ugc.ac.lk என்ற இணையத்தளத்திற்குச் சென்று விண்ணப்பங்களை சமர்ப்பிக்க முடியும்.
மேலும், விண்ணப்பங்களை அனுப்பி வைப்பதற்கான கடைசி திகதி எதிர்வரும் ஜூலை மாதம் 5ஆம் திகதியாகும் என்று பல்கலைக்கழக மானியங்கள் ஆணைக்குழுவின் சிரேஷ்ட பேராசிரியர் சம்பத் அமரதுங்க தெரிவித்துள்ளார்.