எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவுக்கும் தமிழ் மக்கள் கூட்டணியின் தலைவரும் பாராளுமன்ற உறுப்பினருமான க.வி.விக்னேஸ்வரனுக்கும் இடையிலான சந்திப்பு யாழில் நேற்றையதினம்(12) இடம்பெற்றுள்ளது.
குறித்த சந்திப்பு யாழ் நல்லூர் கோவில் வீதியில் உள்ள விக்னேஸ்வரனின் இல்லத்திலேயே குறித்த சந்திப்பு இடம்பெற்றுள்ளது.
எதிர்க்கட்சி தலைவர் சஜித் பிரேமதாச வடமாகாணத்திற்கு விஜயம் மேற்கொண்டுள்ள நிலையில் பல்வேறு நிகழ்வுகளிலும் பங்கேற்றிருந்தார்.
இந்நிலையிலேயே விக்னேஸ்வரனையும் சந்தித்து அரசியல் நிலைமைகள் தொடர்பில் கலந்துரையாடியதாகவும் தெரிவிக்கப்படுகிறது.