தெற்கு அதிவேக நெடுஞ்சாலையின் 61 ஆவது கிலோமீற்றர் தூணுக்கு அருகில் இன்று அதிகாலை விபத்து ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்து.
அதிர்ஷ்டவசமாக இந்த விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.
மத்தளையில் இருந்து கொட்டவை நோக்கி பயணித்த எரிபொருள் பவுசர் ஒன்று வீதியின் நடுவில் இருந்த பாதுகாப்பு வேலியில் மோதி விபத்துக்குள்ளானது.
விபத்து காரணமாக கொழும்பு நோக்கிச் செல்லும் ஒரு மருங்கு தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுகின்றது.
இதனால் கொழும்பு நோக்கிச் செல்லும் வாகனங்கள் மற்றைய மருங்கை பயன்படுத்த முடியும் என காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.