திருகோணமலை – கந்தளாய் வான் எல பகுதியில் வேம்பம் மரத்திலிருந்து பால் போன்ற திரவம் வடியத் தொடங்கியதை கண்டு மக்கள் அதிர்ச்சிடைந்த சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இந்தப் பகுதியில், குடியிருப்பு காணியில் உள்ள வேப்பமரம் ஒன்றிலிருந்து இவ்வாறான திரவம் வெளிவருவதை கடந்த ஆறாம் தேதி வீட்டு உரிமையாளர் அவதானித்ததாகவும், அதை குடித்த போது இனிப்பு சுவையுடையதாக இருந்ததாகவும் தெரிவித்துள்ளார்
இந்த செய்தி, பிரதேச முழுவதும் வேகமாக பரவியதால் மக்கள் மத்தியில் பெரும் பரபரப்பான நிலை காணப்பட்டது.
இதன் காரணமாக மக்கள் குறித்த வேப்பமரத்தை பார்ப்பதற்கு படையெடுத்து வருகின்றனர்
குறித்த மரத்தை பார்ப்பதற்கு அங்கு செல்லும் மக்கள் அதிலிருந்து வரும் திரவத்தை அருந்தி செல்வதையும் காணக் கூடியதாக உள்ளது.