மட்டக்களப்பு – காத்தான்குடி பிரதான வீதியின் தளங்குடா பகுதியில் வன்னி மாவட்ட முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவமோகன் பயணித்த வாகனம் விபத்துக்குள்ளானதில் ஒருவர் காயமடைந்துள்ளார்.
இந்த விபத்து இன்று அதிகாலை இடம்பெற்றதாக கத்தான்குடி பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் பயணித்த வாகனம், வீதியை விட்டு விலகி, மின்தூண் ஒன்றில் மோதுண்டுள்ளது.
விபத்து நேரும் சந்தர்ப்பத்தில் வாகனத்தில் சிவமோகன் உள்ளிட்ட மூவர் பயணித்துள்ளதாக பொலிஸார் குறிப்பிடுகின்றனர்.
இந்த விபத்தில் காயமடைந்த நபர், தனியார் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு சிகிச்சை பெற்று வருகின்றதுடன்,
மேலதிக விசாரணைகளை காத்தான்குடி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றமை குறிப்பிடத்தக்கது.