இலங்கைக்கான அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் ஸ்டேட்டன் தீவில் உள்ள புலம்பெயர் இலங்கையர்களை சந்தித்து பல்வேறு விடயங்கள் குறித்து கலந்துரையாடியுள்ளார்.
பொறுப்புக்கூறல், நீதி மற்றும் நல்லிணக்கம் குறித்த அவர்களின் கருத்துக்களைக் கேட்பதற்காக ஸ்டேட்டன் தீவில் உள்ள தமிழ் சமூகத்தைச் சந்திப்பதைப் பாராட்டுவதாகத் தூதர் தனது எக்ஸ் தளத்தில் குறிப்பிட்டுள்ளார்.
இது ஒரு மதிப்புமிக்க முன்னோக்கிய பரிமாற்றம், தொடர்ச்சியான கலந்துரையாடல் மற்றும் பரஸ்பர புரிதலின் முக்கியத்துவத்தை வலியுறுத்துகிறது,” என்றும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
ஸ்டேட்டன் தீவில் உள்ள இலங்கை கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகத்தையும் தூதுவர் பார்வையிட்டார்.
இது அமெரிக்காவில் உள்ள தீவு தேசத்தின் வரலாறு மற்றும் படைப்பாற்றல் கலைகளுக்கு அழகான மரியாதை என்று அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
இலங்கைக்கு அப்பால் வெளிநாட்டில் இருக்கும் முதல் இலங்கை கலை மற்றும் கலாச்சார அருங்காட்சியகம் இதுவாகும்.
மேலும், இதன்போது வழங்கப்பட்ட விருந்தோம்பலுக்கும் அமெரிக்க தூதுவர் ஜூலி சுங் நன்றி தெரிவித்துள்ளார்.