இந்த வருடத்தில் ஸ்ரீலங்கா சுமார் 6,000 தொழிலாளர்களை ஜப்பானுக்கு (Japan) அனுப்பவுள்ளதாக தொழில் அமைச்சு தெரிவித்துள்ளது.
பராமரிப்பாளர்கள், கட்டுமானத் தொழிலாளர்கள் மற்றும் விவசாயத் துறைக்கான தொழிலாளர்களையே ஜப்பானுக்கு அனுப்புவதாக தொழிலாளர் மற்றும் வெளிநாட்டு வேலைவாய்ப்பு அமைச்சர் மனுச நாணயக்காரவின் (Manusha Nanayakkara) பேச்சாளர் சஞ்சய நல்லபெரும தெரிவித்துள்ளார்.
இந்த வருட ஆரம்பத்தில் இருந்து இதுவரை 3,223 தொழிலாளர்கள் ஜப்பானுக்கு அனுப்பப்பட்டுள்ளனர். 4,518 தொழிலாளர்கள் 2023 இல் 5,647 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டனர்.
அத்துடன் 2022 இல் 4,518 தொழிலாளர்கள் அனுப்பப்பட்டதாக நல்லபெரும கூறியுள்ளார்.
ஜப்பானில் திறமையான தொழிலாளர்களுக்கு அதிக சம்பளம் கிடைப்பதாக தெரிவித்த அவர், திறமையான தொழிலாளிக்கு ஸ்ரீலங்கா பெறுமதியில் 5 லட்சம் ரூபாய் கிடைக்கும் என்று குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உற்பத்தி, மீன்பிடி மற்றும் கட்டுமானத் தொழில்களில் இந்த ஆண்டு 10,000 தொழிலாளர்களை தென் கொரியாவுக்கு அனுப்பவும் அரசாங்கம் திட்டமிட்டுள்ளது என்றும் நல்லபெரும தெரிவித்துள்ளார்.