Search
Close this search box.
காணாமல் போன மாணவி சடலமாக மீட்பு: பொலிஸார் தீவிர விசாரணை

கண்டி (Kandy) ரெலுகேஸ் இல 2 கெல்லாபோக்க மடுல்கலை சேர்ந்த ஹரிவதனி என்ற உயர்தர மாணவி காணாமல் போயிருந்த நிலையில் நேற்று (09) சடலமாக கண்டெடுக்கப்பட்டார்.

குறித்த மாணவி கடந்த வெள்ளிக்கிழமை முதல் காணாமல் போயிருந்த நிலையிலேயே மாணவியின் பிறந்த நாளான நேற்று தவறான முடிவெடுத்து உயிரிழந்துள்ளார்.

சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் விசாரணை மேற்கொண்ட போது மாணவியை யாரும் கடத்தவில்லை என தெரியவந்துள்ளது.

உயிரிழந்த மாணவியின் சடலம் பிரேத பரிசோதனைக்காக கண்டி போதன வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது.

Sharing is caring

More News