Search
Close this search box.
உயிருக்கு அச்சுறுத்தல்..! விசாரணை தேவையில்லை என்கிறார் ஹர்ஷ டி சில்வா..!

தமக்கு உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்தமை தொடர்பில் விசாரணைகளை மேற்கொள்ள வேண்டிய அவசியமில்லை என அரசாங்க நிதி தொடர்பான பாராளுமன்ற குழுவின் தலைவர் கொழும்பு மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கலாநிதி ஹர்ஷ டி சில்வா குற்றப் புலனாய்வு திணைக்களத்திற்கு அறிவித்துள்ளார்.

இதன்படி, ஹர்ஷ டி சில்வாவின் கோரிக்கை தொடர்பில் சபாநாயகர் மஹிந்த யாப்பா அபேவர்தனவுக்கு திணைக்களம் அறிவித்துள்ளது.

தனது உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதாக ஹர்ஷ டி சில்வா நாடாளுமன்றத்தில் அறிவித்ததையடுத்து, குற்றப் புலனாய்வுப் பிரிவினர் விசாரணைகளை ஆரம்பித்தனர்.

இதனால் உயிர் அச்சுறுத்தல் தொடர்பில் வாக்குமூலம் பெறுமாறு திணைக்களத்திற்கு அறிவிக்கப்பட்டது. அப்போது விசாரணை தேவையில்லை என்று தெரிவித்தார்.

விசாரணையை ஆரம்பித்தமைக்காக பொது பாதுகாப்பு அமைச்சர் மற்றும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திற்கு தான் நன்றி தெரிவிப்பதாகவும்,

நாடாளுமன்ற சிறப்புரிமையின் கீழ் பாராளுமன்றத்தில் தாம் அவ்வாறு கருத்து தெரிவித்ததாகவும் ஹர்ஷ டி சில்வா தெரிவித்திருந்தார்.

அவர் தொடர்பில் அவ்வாறான விசாரணைகள் தேவையில்லை எனவும், தேவைப்பட்டால் மீண்டும் அறிவிப்பதாகவும் ஹர்ஷ டி சில்வா மேலும் தெரிவித்துள்ளதாக பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.

Sharing is caring

More News