சென்னை விமான நிலையத்தில் வைத்து இலங்கையர் ஒருவர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
பெருந்தொகை தங்க நகைகளை கடத்த முற்பட்ட வேளையில் சுங்க அதிகாரிகளால் அவர் கைது செய்யப்பட்டுள்ளார்.
இதன்போது 13.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
இதன் பெறுமதி சுமார் ஒன்பது கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது.
நேற்று முன்தினம் சிங்கப்பூரில் இருந்து வந்த இலங்கையரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளார்.
கடத்தல் நடவடிக்கையில் ஈடுபட்ட இண்டிகோ விமான நிறுவன ஊழியர் ஒருவருடன் சந்தேக நபரும் கைது செய்யப்பட்டுள்ளார்.
பாரிய தங்க கடத்தல் கும்பல் ஒன்றுடன் தொடர்புடைய ஒவரே இவ்வாறு கைது செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.