Search
Close this search box.
தமிழர் பகுதியில் பறிபோயுள்ள விவசாய நிலங்கள்

பாரம்பரிய விவசாய நிலங்கள் விடுவிக்கப்படும் என அதிபர் பல்வேறு மாவட்டங்களுக்கான தனது விஜயத்தின் போது உறுதியளித்துள்ள போதிலும் அது பேச்சளவில் மட்டுமே இருந்து வருகிறது என எதிர்க்கட்சித்தலைவர் சஜித் பிரேமதாச (Sajith Premadasa) குற்றம்சாட்டியுள்ளார்.

நாடாளுமன்றத்தில் நேற்று (06) வியாழக்கிழமை வடக்கு கிழக்கு காணி விவகாரம் தொடர்பிலேயே உரையாற்றும் போதே எதிர்க்கட்சித் தலைவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.

வடக்கு, கிழக்கு மாகாணங்களில் யுத்தம் நிறைவடைந்த பின்னரும் அந்தப் பிரதேசங்களில் வாழும் மக்களின் வாழ்வாதாரத்தைப் பேணுவதற்கான காணி பயன்பாட்டுப் பிரச்சினை இன்னமும் தீர்க்கப்படாத பிரச்சினையாகவே உள்ளது.

குடியிருப்புகளைச் சுற்றியுள்ள பெரும்பாலான இடங்கள் பாதுகாக்கப்பட்ட வனப்பகுதியாக வர்த்தமானி வெளியிடப்பட்டிருத்தல் இதற்கு காரணமாகும்.

அவ்வாறே மக்களுக்கான காணிகளை விடுவிப்பதில் அரசாங்கத்தின் நடவடிக்கைகளிலும் பல பிரச்சினைகள் காணப்படுவதும் இதற்கு காரணமாக அமைகின்றது.

அம்பாறை, மொனராகலை, திருகோணமலை மாவட்டங்களுக்கு, வடக்கு, கிழக்கு மாகாணங்களுக்கு அண்மையில் விஜயம் செய்த போது அவர்களது பாரம்பரிய விவசாய நிலங்கள் பறிபோயுள்ளமை தெரிய வந்தது.

எனவே இதன் உண்மையை நிலை என்ன? மேலும் விவசாயிகள் பாரம்பரியமாக விவசாயத்தை மேற்கொண்டு வரும் விளைநிலங்களை பாதுகாக்கவும் அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித்தலைவர் கோரிக்கை விடுத்துள்ளார்.

Sharing is caring

More News