Search
Close this search box.
திடீரென தீப்பற்றி எரிந்த தேயிலை தொழிற்சாலை – அதிகாலையில் பரபரப்பு

நாவலப்பிட்டி –  குருதுவத்தை கல்பாய பிரதேசத்தில் அமைந்துள்ள தனியார் தேயிலை தொழிற்சாலையில் இன்று தீ விபத்து சம்பம் ஒன்று இடம்பெற்றுள்ளது.

அதன்படி இன்று அதிகாலை 3.45 மணியளவில் தேயிலை தொழிற்சாலையில் உற்பத்திப் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருந்த வேளையில்,

கீழ் மாடியில் இருந்து தீ பரவியதுடன் மூன்றாவது மாடிக்கும் பரவியதாக குருதுவத்தை பொலிஸார் தெரிவித்தனர்.

தீ விபத்து ஏற்பட்ட போது தேயிலை தொழிற்சாலையில் பல ஊழியர்கள் மற்றும் தொழிலாளர்கள் குழு வேலை செய்து கொண்டிருந்ததாகவும்,

தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என்றும் பொலிசார் தெரிவித்தனர்.

மேலும் தேயிலை தொழிற்சாலையில் சேமித்து வைக்கப்பட்டிருந்த தேயிலை துாள்கள் தீயில் எரிந்ததுடன் பிரதேசவாசிகள் மற்றும் தோட்டத் தொழிலாளர்கள் தீ பரவியதைத் தடுக்க முயற்சித்த போதிலும் அதனை கட்டுப்படுத்த முடியாமல் போனதால் கண்டி மாநகரசபையின் தீயணைப்புப் பிரிவினர் அழைக்கப்பட்டதாகவும் குறிப்பிடப்பட்டுள்ளது.

Sharing is caring

More News