ஆளும் கட்சி உறுப்பினர்களுக்கும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவிற்கும் இடையில் நேற்றைய தினம் இரவு பத்தரமுல்ல பகுதியில் சந்திப்பு ஒன்று நடைபெற்றுள்ளது.
எதிர்கால அரசியல் நிலைமைகள் குறித்து இந்த சந்திப்பு நடைபெற்றுள்ளது.
இதன்போது அனைவரும் இணைந்து செயற்பட வேண்டுமென ஜனாதிபதி தெரிவித்துள்ளார்.
ஶ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் 31 உறுப்பினர்கள் இந்த சந்திப்பில் பங்கேற்றுள்ளனர்.
மாவட்ட இணைப்புச் செயற்குழுக்களின் தலைவர்களும் இந்த சந்திப்பில் இணைந்து கொண்டதாகத் தெரிவிக்கப்படுகின்றது.
எவ்வாறெனினும் இந்த சந்திப்பில் பொதுஜன முன்னணியின் பொதுச் செயலாளர் சாகர காரியவசம் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்ச ஆகியோர் பங்கேற்கவில்லை என தெரிவிக்கப்படுகின்றது.