ஜனாதிபதி தேர்தலில் ரணில் விக்ரமசிங்க சுயேச்சை வேட்பாளராக போட்டியிடுவார் என ஜனாதிபதி ஆலோசகர் பேராசிரியர் ஆஷு மாரசிங்க தெரிவித்துள்ளார்.
ரணிலின் புதிய அரசியல் அலுவலகத்தை கொழும்பில் நேற்று திறந்து வைக்கும் நிகழ்வில் கலந்து கொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தமது அரசியல் நடவடிக்கைகளுக்கான அலுவலகத்தை திறந்து வைத்துள்ளார்.
இதேவேளை, ஜனாதிபதி தேர்தல் இவ்வருடத்தில் குறிப்பிட்ட காலப்பகுதியில் நடாத்தப்படும் என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க ஏற்கனவே தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.