Search
Close this search box.
அரசாங்கத்திற்கு எந்த வித ஆணையும் இல்லை!

எமது நாட்டில் மின் உற்பத்தி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் மின்சார சட்டத்தை அவசரமாக எடுத்துக்கொள்வதை விடுத்து, அதை மேலும் ஆராய்ந்து குறைபாடுகளை நிவர்த்தி செய்ய நடவடிக்கை எடுக்க வேண்டும். தேசிய சொத்துக்கள் மற்றும் தேசிய வளங்களை இவ்வாறு இஷ்டத்துக்கு ஏற்ப மறுசீரமைக்க தற்போதைய அரசாங்கத்துக்கு மக்கள் ஆணை இல்லை. இன்று (07) கூட இது தொடர்பில் விவாதித்து முடிவெடுக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச நேற்று (06) பாராளுமன்றத்தில் தெரிவித்தார்.

எமது நாட்டின் மின்சார உற்பத்தி முறையில் பெரிய மாற்றத்தை ஏற்படுத்தும் விடயமாக இந்த மின்சார சட்டத்தை அழைக்கலாம். இந்த சிக்கலான சட்டத்தில் மாற்றங்களைச் செய்யும்போது, ​​உன்னிப்பாகக் கவனித்து, சாத்தியமான அனைத்து விளைவுகளையும் நன்கு புரிந்துகொண்டு அதை ஆராய்ந்து, குறைபாடுகளை களைந்து இந்த சட்டத்தை அமுல்படுத்துவது தொடர்பில் தீர்மானம் எடுக்கப்பட வேண்டுமென எதிர்க்கட்சித் தலைவர் இங்கு தெரிவித்தார்.

மின்சாரத்துறையில் நிகழும் மாற்றம் குறித்தும் நடைமுறைப்படுத்துவது குறித்தும் மேலும் ஆராய்ந்து, ஒருதலைபட்சமாக மேற்கொள்ளாமல், மேற்கொண்டு ஆய்வுகளுக்கு உட்பட்டு கலந்துரையாடி, இதனை ஏற்றுக்கொள்வதா இல்லையா என்பதை தீர்மானிக்க வேண்டும் என எதிர்க்கட்சித் தலைவர் இங்கு சுட்டிக்காட்டினார்.

Sharing is caring

More News