எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எதிர்வரும் ஞாயிறுக்கிழமை முதல் வியாழன் வரை வடக்குக்கு விஜயம் மேற்கொள்ளவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கும் முகமாக இந்த விஜயம் அமையும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, பிரபஞ்சம் திறன் வகுப்பறைகள், கட்சி நடவடிக்கைகள் உள்ளிட்ட பல்வேறு நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளார்.
மன்னார், யாழ்ப்பாணம், கிளிநொச்சி உள்ளிட்ட மாவட்டங்களில் இடம்பெறும் நிகழ்வுகளிலும் பங்கேற்கவுள்ளார் என குறிப்பிடப்படுகின்றது.
அதிபர் தேர்தல் நெருங்கி வரும் நிலையில் சஜித்தின் இந்த விஜயம் முக்கிய விஜயமாக அமையும் என சுட்டிக்காட்டப்படுகின்றது.