பெருந்தோட்ட தொழிலாளர்களுக்கு 1,700 ரூபாய் சம்பளம் தொடர்பாக நீதிமன்றத்தில் வெளியான தீர்ப்புக்கு மலையக பெருந்தோட்ட தொழிலாளர்கள் பட்டாசு கொழுத்தி பாற்சோர் சமைத்து சந்தோசங்களை பகிர்ந்து கொண்டனர். நேற்று (04) வனராஜா மணிக்கவத்தை மற்றும் வனராஜா வோர்லி ஆகிய தோட்டப்பகுதியில் உள்ள தொழிலாளர்கள் சந்தோசத்தினை பகிர்ந்து கொண்டார்கள்.
பெருந்தோட் தொழிலாளர்களுக்கு இந்த 1,700 ரூபாய் சம்பளத்தை பெற்றுக்கொடுக்க முன் நின்று பாடுபட்ட நாட்டின் ஜனாதிபதி ரனில் விக்ரமசிங்க தொழில் மற்றும் வெளிநாட்டு அமைச்சர் மனுஷ்க நானயகார இலங்கை தொழிலாளர் காங்ரஸின் காங்ரஸின் பொதுச்செயலாளரும் அமைச்சருமான ஜீவன் தொண்டமான் இலங்கை தொழிலாளர் காங்ரஸின் தலைவரும் கிழக்கு மாகாண ஆளுனருமான செந்தில் தொண்டமான் நுவரெலியா மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் மருதுபாண்டி ராமேஸ்வரன் ஆகியோருக்கு மக்கள் நன்றியினையும் தெரிவித்தனர்.