4000 விவசாயிகளுக்கு 40 இலட்சம் ரூபா பெறுமதியான பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களை 25% மானியத்தின் கீழ் வழங்குவதற்கு தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.
கமநல அபிவிருத்தித் திணைக்களத்தினால் இந்த மானியம் வழங்கப்படவுள்ளது.
குறித்த தீர்மானமானது, விவசாய அமைச்சர் மகிந்த அமரவீரவின் ஆலோசனைக்கமைவாக எடுக்கப்பட்டுள்ளது.
புதிய விவசாய தொழில்நுட்பத்தை விவசாயிகளுக்கு அறிமுகப்படுத்தும் திட்டத்தின் கீழ், நாற்றுகளை நடுவதற்கு இந்த பாராசூட் நாற்றங்கால் தட்டுக்கள் பயன்படுத்தும் முறை அறிமுகப்படுத்தப்பட்டுள்ளது.
இந்த நிலையில், அறிமுகப்படுத்தப்படவுள்ள பாராசூட் நாற்றங்கால் தட்டுக்களின் அதிக நெல் விளைச்சல்களை பெற முடியும் என தெரிவிக்கப்படுகிறது.