இலங்கையால் இந்தியாவிற்கு ஆபத்து இருப்பதால் இலங்கையை இந்தியா தனது கண்காணிப்பின் கீழ் வைத்திருக்க வேண்டும் என்ற மறைமுகமான ஒரு அழுத்தம் பிரயோகிக்கப்படப் போகின்றது என பிரித்தானியாவில் இருக்கும் இராணுவ ஆய்வாளர் கலாநிதி. அருஸ் தெரிவித்துள்ளார்.
லங்காசிறியின் ஊடறுப்பு நிகழ்ச்சியில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையில் இருந்து தீவிரவாதத்தினை உருவாக்கி இந்தியாவிற்கு அனுப்புவதாக செய்திகள் வெளியாகி வரும் நிலையில், இந்தியாவின் பாதுகாப்பிற்காக இந்திய புலனாய்வு துறையினர் இலங்கைக்கு வந்து செல்லும் வாய்ப்புள்ளதாக அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.
இலங்கையின் அடுத்து வரப்போகின்ற அரசு எப்படி இருக்கப்போகின்றது என்ற குழப்பத்தில் இருக்கும் இந்தியா, ஆட்சிக்கு வரவுள்ள கட்சி மேற்குலகம் சார்பாக இருந்தால் தங்களுக்குரிய ஒரு பிடியை வைத்திருப்பதற்குரிய நடவடிக்கையாக தான் இதனைப் பார்க்கலாம் என தெரிவித்துள்ளார்.
ரணில் விக்ரமசிங்கவிற்கும் இந்தியாவிற்கும் இடையிலான உறவு தற்போது சுமுகமாக இல்லாத நிலையில், இந்தியாவிற்கு பெரும் அச்சம் ஏற்பட்டுள்ளதாகவும் இலங்கையை தனது கண்காணிப்பில் வைத்திருக்க முற்படுவதாகவும் கூறப்படுகின்றது.
இந்தியாவின் சூழ்ச்சியினை பாதுகாப்பு அமைச்சின் செயலாளர் (ஓய்வுபெற்ற) ஜெனரல் கமல் குணரட்ன அறிக்கையொன்றினை வெளியிட்டு தெளிவாக சுட்டிக்காட்டியுள்ளதாகவும் குறிப்பிட்டுள்ளார்.