Search
Close this search box.
ஆலய கிணற்றில் மீட்கப்பட்ட இளம் பெண்ணின் சடலம் – யாழில் சம்பவம்

யாழ்ப்பாணம் – ஊர்காவற்றுறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட புங்குடுதீவு மடத்துவெளி வயலூர் முருகன் ஆலய கிணற்றிலிருந்து இளம் பெண் ஒருவரின் சடலம் மீட்கப்பட்டுள்ளது.

குறித்த சடலமானது பொலிஸாருக்கு வழங்கிய தகவலையடுத்து நேற்று கண்டெடுக்கப்பட்டுள்ளது.

உயிழந்தவர், புங்குடுதீவு மடத்துவெளி எட்டாம் வட்டாரத்தை சேர்ந்த 27 வயதுடைய சிவகுகானந்தன் சிந்துயா என பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

அத்துடன், சடலம் யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் பிரேத பரிசோதனைக்காக வைக்கப்பட்டுள்ளதுடன்,

சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை ஊர்காவற்துறை பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

Sharing is caring

More News