வவுனியா நெடுங்கேணி பகுதியில் புளியங்குளம் போலீஸ் நிலைய பொறுப்பதிகாரி நிறை போதையில் வாகனம் செலுத்தி விபத்து ஏற்படுத்திய சம்பவம் ஒன்று பதிவாகியுள்ளது.
இவ்விடயம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது வவுனியா நெடுங்கேணி பகுதியில் பயணித்து கொண்டிருந்த போலீஸ் வாகனம் திடீரென நிலை தடுமாறி வீதியை விட்டு விலகி வீட்டுக்கானிக்குள் புகுந்துள்ளது. அத்துடன் விபத்து இடம்பெற்ற வீட்டில் சிறுவர்களுக்கான தனியார் வகுப்பும் இடம்பெற்றுள்ளதுடன். தெய்வாதீனமாக அங்கு கல்வி கற்றுக்கொண்டிருந்த 40 சிறுவர்களும் தப்பித்துள்ளதுடன் பாரிய உயிர் சேதமும் தவிர்க்கபட்டுள்ளது.
மேலும் குறித்த வீட்டு உரிமையாளர் எமது செய்தி சேவைக்கு கருத்து தெரிவிக்கையில் அவரது வீட்டின் வேலி மற்றும் சுவர்கள் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் வீட்டில் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த புதிய மோட்டார் சைக்கிளும் முற்றாக சேதமடைந்துள்ளதாகவும் தெரிவித்தார். அத்துடன் வாகனத்தை செலுத்தி வந்தது நான் தான் என போலீஸ் பொறுப்பதிகாரி தெரிவித்ததாகவும் அப்போது அவர் நிறை போதையில் இருந்ததாகவும் குறித்த வீட்டு உரிமையாளர் தெரிவித்துள்ளார்.
அத்துடன் விபத்துக்குள்ளான வாகனம் வீதியில் இருந்த மின் கம்பங்களில் மோதி சேதம் அடைந்ததன் காரணமாக அப்பகுதியில் மின்சார ஒழுக்கு ஏற்பட்டு அப்பகுதியில் உள்ள சில வீடுகளில் மின் உபகரண பொருட்கள் சேதமடைந்துள்ளதாக தெரிவித்துள்ளதுடன் இப் விபத்தை திசை மாற்ற போலீஸ் கடும் பிராயத்த்தனம் மேற்கொண்டு வருவதாக அப்பகுதி மக்கள் விசனம் வெளியிட்டுள்ளனர்.
மேலும் சம்பவத்துடன் தொடர்புடைய குறித்த போலீஸ் உத்தியோகத்தர் தற்போது வவுனியா போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.