Search
Close this search box.
இந்தியாவில் துயரம்: 33 தேர்தல் அதிகாரிகள் உயிரிழப்பு

இந்திய (india) பொதுத் தேர்தல் முடிவடைந்த நிலையில், தேர்தல் பணியில் ஈடுபட்டிருந்த 33 தேர்தல் அலுவலர்கள் கடும் வெப்பம் காரணமாக வாக்களிப்பு நிலையங்களிலேயே உயிரிழந்துள்ளதாக அந்நாட்டு ஊடகங்கள் தெரிவிக்கின்றன.

தற்போது இந்தியாவின் வடக்கு மற்றும் மத்திய மாநிலங்கள் கடும் வெப்பத்தில் தத்தளித்து வருகின்றன. சில மாநிலங்கள் மற்றும் நகரங்களில் வெப்பநிலை 49 டிகிரி செல்சியஸைத் தாண்டியுள்ளது. ‘

மேலும் உயிரிழந்த அதிகாரி ஒருவருக்கு இந்திய அரசு 1.5 மில்லியன் இந்திய ரூபாய் இழப்பீடு வழங்க முடிவு செய்துள்ளதாக நவ்தீப் ரின்வா ஊடகங்கள் முன் விளக்கமளித்துள்ளார்.

இந்த நாட்களில் இந்தியாவை பாதித்துள்ள கடும் வெப்பமான காலநிலையால் உயிரிழந்த இந்தியர்களின் எண்ணிக்கை 58 என இந்திய ஊடகங்கள் தெரிவிக்கின்றன.உத்தரபிரதேசம், பீகார், மத்திய பிரதேசம் மற்றும் ஒடிசா ஆகிய மாநிலங்களில் இருந்து இறப்புகள் பதிவாகியுள்ளன.

7 கட்டங்களின் கீழ் 44 நாட்கள் நடைபெற்ற இந்திய பொதுத் தேர்தல் முடிவடைந்தது. ஒரு மில்லியன் வாக்குச் சாவடிகள் அமைக்கப்பட்டு 15 மில்லியன் தேர்தல் அலுவலர்கள் தங்கள் கடமைகளில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

Sharing is caring

More News