Search
Close this search box.
வலயக் கல்விப் பபணிப்பாளர்களுக்கு வழங்கப்பட்டுள்ள அதிகாரம்

நாட்டில் நிலவி வரும் சீரற்ற காலநிலை காரணமாக பாடசாலைகளை மூடும் அதிகாரம் வலயக் கல்விப் பணிமனைகளுக்கு வழங்கப்பட்டுள்ளது.

வலக் கல்விப் பணிப்பாளர்கள் பாடசாலைகளை மூடுவது தொடர்பில் தீர்மானம் எடுக்க முடியும் என கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

காலநிலை சீர்கேடு காரணமாக இன்றைய தினமும் நாட்டின் சில பகுதிகளில் பாடசாலைகள் மூடப்பட்டுள்ளன.

காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் சகல பாடசாலைகளும் இன்றும் நாளையும் மூடப்பட்டுள்ளது.

களுத்துறை, ரத்தினபுரி, கேகாலை மாவட்ங்களின் பாடசாலைகளுக்கும் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

ஹோமகம, கம்ஹா மற்றும் களனி ஆகிய கல்வி வலயங்களிலும் பாடசாலைகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்கும் அதிகாரத்தை வலயக் கல்விப் பணிப்பாளர்களுக்கு வழங்குவதாக கல்வி அமைச்சு அறிவித்துள்ளது.

Sharing is caring

More News