Search
Close this search box.
பின்வாங்கிய அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்குகின்றனர் – அனுரகுமார

அரகலயவின் போது பின்வாங்கிய அரசியல்வாதிகள் தற்போது மீண்டும் தலைதூக்குகின்றனர் என ஜேவிபியின் தலைவர் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் இடம்பெற்ற தேசிய மக்கள் சக்தியின் மாநாட்டில் உரையாற்றுகையில் அவர் இதனை தெரிவித்துள்ளார்.

அரகலயவின் பின்னர் பின்வாங்கிய ஊழல் ரவுடி அரசியல்வாதிகள் மீண்டும் தலைதூக்க தொடங்கியுள்ளனர் என தெரிவித்துள்ள அவர் அரகலயவின் உண்மையான அபிலாசைகள் நிiவேற்றப்படவேண்டும் என்றால் மக்கள் எழுச்சியின் உண்மையான நோக்கங்களை நிறைவேற்றும் அரசாங்கத்தினை ஏற்படுத்தவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.

2022 மக்கள் எழுச்சியின் உண்மையான அபிலாசைகளை உறுதிசெய்யக்கூடிய அரசாங்கம் தேசிய மக்கள் சக்தி அரசாங்கமே எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

அரசியல்வாதிகள் இன்னமும் அரகலயவிலிருந்து பாடங்களை கற்கவில்லை மாறாக அதனை அவமானப்படுத்தும் நோக்கத்துடன் செயற்படுகின்றனர் எனவும் ஜேவிபி தலைவர் குறிப்பிட்டுள்ளார்.

மக்கள் குறிப்பாக இளைஞர்கள் எந்தவொரு அரசியல்கட்சியுடனும் தங்களை அடையாளப்படுத்தாமல் பொதுவான அபிலாசைகளிற்காக வீதியில் இறங்கினார்கள் எனவும் அனுரகுமாரதிசநாயக்க தெரிவித்துள்ளார்.

ஊழல் மோசடி அற்ற ஒழுக்கமும்சட்டமும் காணப்படும் நாட்டை மக்கள் எதிர்பார்க்கின்றனர் பொதுவான சமூக நோக்கத்திற்காக அவர்கள் வீதியில் இறங்கினார்கள் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

Sharing is caring

More News