தற்போதைய பேரிடர் நிலையைக் கருத்தில் கொண்டு காலி மற்றும் மாத்தறை மாவட்ட பாடசாலைகளுக்கு விடுமுறை வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.
அதன்படி, நாளை(04) மற்றும் நாளை மறுதினம்(05) காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களில் அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளது.
தென்மாகாண ஆளுநர் லக்ஷ்மன் யாப்பா அபேவர்தன, கல்வி அதிகாரிகளுடன் நடத்திய கலந்துரையாடலில் இந்தத் தீர்மானம் எடுக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.
இதேவேளை நாட்டில் தற்போது நிலவும் சீரற்ற காலநிலை காரணமாக இன்றையதினமும் நாட்டிலுள்ள அனைத்து பாடசாலைகளுக்கும் விடுமுறை வழங்கப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.