இந்திய கடவுச்சீட்டுகளை சட்டவிரோதமான முறையில் தயாரித்த இரண்டு இலங்கையர்கள் உட்பட மூவரை இந்திய அதிகாரிகள் கைது செய்துள்ளனர்.
இலங்கை அகதிகளுக்கான இந்திய கடவுச்சீட்டுகளை தயாரித்த குற்றச்சாட்டில் இவர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
குற்றப் புலனாய்வுப் பிரிவினர் சந்தேக நபர்களை தமிழகத்தில் வைத்து கைது செய்துள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
எவ்வாறாயினும், இந்த மோசடி தொடர்பில் கிடைத்த தகவலின் அடிப்படையில் இந்திய குற்றப் புலனாய்வுத் திணைக்களம் இந்த ஆண்டு ஜனவரி மாதம் விசாரணைகளை ஆரம்பித்துள்ளது. அதன்படி, மோசடி தொடர்பாக 26 பேர் கைது செய்யப்பட்டுள்ளதாக இந்திய ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இந்தக் குழுவில் மூன்று இலங்கையர்கள் உள்ளதாக தெரிவிக்கும் இந்திய பொலிஸார், ஆட்கடத்தல் தொடர்பில் 06 பொலிஸ் அதிகாரிகளும் கைது செய்யப்பட்டுள்ளதாக சுட்டிக்காட்டியுள்ளனர்.