பதுளையில் இருந்து கொழும்பு கோட்டை நோக்கி பயணித்த பொடி மெனிகே ரயிலில் தீ பரவியுள்ளது.
இன்று காலை பதுளையில் இருந்து பயணிக்க ஆரம்பித்த ரயிலின் பின் இயந்திரத்தில் தீ பரவியதாக தெரிவிக்கப்படுகிறது.
ஹப்புத்தளை நிலையத்திற்கு அருகில் ரயிலில் தீ பரவியதாகவும், ரயில் ஹப்புத்தளை நிலையத்திற்கு வந்த பின்னர் தீ அணைக்கப்பட்டதாகவும் தெரியவந்துள்ளது.
தீ விபத்தில் யாருக்கும் காயம் ஏற்படவில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது.
தற்போது பொடி மெனிகேவின் ரயில் ஹப்புத்தளை நிலையத்தில் நிறுத்தப்பட்டுள்ளது.