எதிர்வரும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதியுடன் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவின் காலம் முடிவடைகிறது என தேசிய மக்கள் சக்தியின் நிறைவேற்றுக் குழு உறுப்பினர் கே.டி. லால்காந்த தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவை மக்கள் நிராகரித்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்படி செப்டெம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் நவம்பர் மாதம் 17 ஆம் திகதிக்கும் இடைப்பட்ட காலத்தில் நாட்டின் அரசியல் அமைப்பின் பிரகாரம் தேர்தல் நடத்தப்பட வேண்டும் எனவும் அவர் கூறியுள்ளார்.
தேர்தலை ஒத்தி வைப்பது குறித்த யோசனைக்கு நாடாளுமன்றில் கை உயர்த்தும் உறுப்பினர்கள்,
தங்களது சொந்த ஊர்களுக்கு சென்று மக்களை சந்திக்க முடியாது ஒளிந்திருக்க நேரிடும் எனவும் தெரிவித்துள்ளார்.
நாட்டில் நிலவி வரும் அழுத்தம் மிகுந்த ஆட்சியிலிருந்து விடுபட மக்கள் தேர்தலுக்காக காத்திருக்கின்றனர் எனவும்,
இந்த ஆட்சியாளர்களை மக்கள் விரட்டியடிப்பார்கள் என்பது உறுதி என்றும் குறிப்பிட்டுள்ளார்.