மொழி தொடர்பாக நாங்கள் எவ்வளவு பேசினாலும் அடிப்படையில் இருந்து நாம் ஏமாற்றப்படுகின்றோம் என வடமாகாண கடற்றொழில் பிரதிநிதி அ.அன்னராசா (A. Annarasa) தெரிவித்துள்ளார்.
குறித்த விடயத்தை கடற்றொழிலாளர்களது பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக நேற்று (02) இடம்பெற்ற ஊடக மாநாட்டிலேயே அவர் குறிப்பிட்டுள்ளார்.
இது தொடர்பாக அவர் மேலும் தெரிவிக்கையில், “தமிழ் மொழியிலே நாங்கள் கேள்வி எழுப்பும் பொழுது சிங்கள மொழியில் பதிலளிக்கும் கடிதமொன்றை அனுப்பியதன் மூலம் உள்ளூர் இழுவைமடி சட்டத்தினை அரச அதிகாரிகள் தவறாக பயன்படுத்துகின்றமை தெளிவாக புலப்படுகின்றது.
எங்கள் மொழியில் ஒரு கடிதத்தை கூட வழங்க முடியாத அளவிற்கு இலங்கை கடற்றொழில் நீரியல் வள திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் இருக்கின்றார்.
சிங்களம் தெரியாத வடக்கு கடற்றொழிலாளர்கள் இதை எங்கு கொண்டு வாசிப்பது?” என அவர் தெரிவித்துள்ளார்.