முல்லைத்தீவு (Mullaitivu) மாவட்டம் மல்லாவி பொலிஸ் பிரிவுக்குட்பட்ட துணுக்காய் கல்விளான் பகுதியில் உடமையில் வைத்திருந்த நாட்டு துப்பாக்கி வெடித்ததில் சம்பவ இடத்திலேயே இளைஞர் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
குறித்த சம்பவம் நேற்று இரவு (31.05.2024) இடம்பெற்றுள்ளதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
வெளிநாட்டுக்கு அனுப்புவதாக இலங்கையர்களை ஏமாற்றிய முகவர் : பெருந்தொகை கடவுச்சீட்டுக்கள் மீட்பு மேலதிக விசாரணை
இந்த சம்பவத்தில் கண்ணையா அன்பழகன் என்ற 19 வயதுடைய இளைஞர் ஒருவரே உயிரிழந்துள்ளார்.உயிரிழந்தவரின் சடலம் மல்லாவி ஆதார வைத்தியசாலையில் வைக்கப்பட்டுள்ளது சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மல்லாவி பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.