Search
Close this search box.
குத்து சண்டை போட்டியில் பதக்கங்களை குவித்த வவுனியா ஒமேகா லைன் நிறுவனம்

வவுனியாவில் அமைந்துள்ள ஆடை தொழிற்சாலையான ஒமேகா லைன் நிறுவன ஊழியர்களுக்கு நாடளாவிய ரீதியில் இடம்பெற்ற குத்து சண்டை போட்டியில் பலர் வெற்றி பதக்கங்களை பெற்றுள்ளனர்.

மேலும் Omega Line (Ltd) Vavuniya Apparels நிறுவனத்தில் முதன்முறையாக குத்துச்சண்டை விளையாட்டினை ஊக்குவிக்கும் முகமாக பயிற்சிகள் வழங்கப்பட்டன. இவர்களுக்கான பயிற்சிகளை முன்னாள் குத்துச்சண்டை வீரரும் தற்போதைய தேசிய குத்துச்சண்டை பயிற்றுவிப்பாளருமான திரு.முடியப்பு நிக்சன் ரூபராஜ்மாதங்களாக பயிற்சி வழங்கியிருந்தார்.

முதன் முதலில் குத்துச் சண்டை பழகி களம் காணும் வீரர்களுக்காக 12.05.2024 தொடக்கம் 16.05.2024 வரை கொழும்பில் நடைபெற்ற BASL Novices – 2024 குத்துச்சண்டை போட்டியில் வவுனியா ஒமேகா லைன் நிறுவனத்திலிருந்து 16 வீரர்கள்; பங்குபற்றி அதில் ஐந்து வீரர்கள் பதக்கங்களை பெற்றிருந்தமை குறிப்பிடத்தக்கதாகும்.

அதுமட்டுமல்லாது 25.05.2024 மற்றும் 26.05.2024 ம் திகதிகளில் முல்லைத்தீவில் இடம்பெற்ற வடமாகாண குத்துச்சண்டை போட்டியில் ஒமேகா நிறுவனத்தின் அணி வீரர்கள் தத்தமது மாவட்டங்களைப் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்துகொண்டனர். பெரும்பான்மையானோர் வவுனியா மாவட்டத்தையும் ஒருவர் கிளிநொச்சி மாவட்டத்தையும் ஒருவர் முல்லைத்தீவு மாவட்டத்தையும் பிரதிநிதித்துவப்படுத்தி கலந்து கொண்டு பதக்கங்களை வெற்றியீட்டியுள்ளனர்.

சமூக மற்றும் தொழிலாளர் அக்கறை கொண்ட தொழிற்சாலையில் ஊழியர் சேவை மற்றும் திறன் அபிவிருத்தியை வெளிக்கொணரும் ஒரு செயற்பாடாக இது அமைந்துள்ளதுடன். மேலும் எதிர்காலத்தில் பல்வேறு குத்துச்சண்டை போட்டிகளில் பங்கேற்பதை ஊக்குவிக்கும் முகமாகவும் இது காணப்படுவதாக இவ் நிறுவனத்தினர் கருத்து வெளியிட்டுள்ளனர்.

கொழும்பில் நடைபெற்ற BASL Novices – 2024 ,ல் பதக்கங்கள் பெற்றவர்கள் விபரம்ஆண்கள் : ர.டேஸ்மிகாந்த் (82-89Kg) – வெள்ளிப்பதக்கம் பு.மதிகரன் (48-51Kg) – வெண்கலப்பதக்கம் பெண்கள் : கு.கவியாழினி (57-60Kg) – வெண்கலப்பதக்கம் வி.காயத்திரி (48-51Kg) – வெண்கலப்பதக்கம் ரா.வளர்மதி (48-51Kg) – வெண்கலப்பதக்கம

வடக்குமாகாண ரீதியில் பதக்கங்கள் பெற்றவர்கள் விபரம்: பெண்கள் : ஜெஸ்மிதா (64-69 Kg) – 1ம் இடம் (தங்கப்பதக்கம்)
கு.கவியாழினி (57-60Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) வி.காயத்திரி (48-51Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) ந.ஜதுர்சிகா (64-69Kg)) – 2ம் இடம் (வெள்ளிப்பதக்கம்) ரா.வளர்மதி (48-51Kg) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) வ.றோசினி (54-57Kg))- 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) சு.சுதர்சினி (48-51Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) ஆண்கள் : பு.மதிகரன் (48-51Kg)) – 1ம் இடம் (தங்கப்பதக்கம்) ச.துஷயந்தன் (67-71Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) சு.சுபிட்ஸன் (60-63.5Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்) ச.யதுகுலன் (75-80Kg)) – 3ம் இடம் (வெண்கலப்பதக்கம்)

Sharing is caring

More News