குருணாகல் சுரதிஸ்ஸ மாவத்தையில் சட்டவிரோதமான முறையில் இயங்கி வந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனமொன்றின் உரிமையாளர் நேற்று வெள்ளிக்கிழமை (31) கைது செய்யப்பட்டுள்ளார்.
அங்குச் சவுதி அரேபியா, ஓமன், குவைத் உள்ளிட்ட மத்திய கிழக்கு நாடுகளுக்கு ஆட்சேர்ப்பு செய்து வருவதும் தெரியவந்துள்ளது.
இந்த வெளிநாட்டு வேலைவாய்ப்பு முகவர் நிறுவனத்திலிருந்து போலியான 110 கடவுச்சீட்டுகள், வேலைவாய்ப்பு விண்ணப்பங்கள் மற்றும் பல ஆவணங்களையும் பொலிஸார் கைப்பற்றியுள்ளனர்.
கைது செய்யப்பட்ட சந்தேக நபர் நேற்று (31) குருணாகல் நீதவான் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டமை குறிப்பிடத்தக்கது.