Search
Close this search box.
எதிர்க்கட்சி எம்.பிகளுக்கு மதுபான உரிமங்கள்…!

அரசாங்கத்திடம் இருந்து மதுபான அனுமதிப்பத்திரங்களை பெற்றதாகக் கூறப்படும் எதிர்க்கட்சி எம்.பி.க்கள் குழுவிற்கு அந்த உரிமங்களை உடனடியாக அரசாங்கத்திடம் மீள ஒப்படைக்குமாறு எதிர்க்கட்சி கட்சித் தலைவர்கள் அறிவித்துள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

எவ்வாறாயினும், அந்த பாராளுமன்ற உறுப்பினர்கள் எவரும் இதுவரையில் தமது மதுபான அனுமதிப்பத்திரத்தை அரசாங்கத்திடம் ஒப்படைக்கவில்லை என அரசியல் வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

இதேவேளை, பதுளை ரிதிமாலியத்தவில் 6 மதுபானசாலைகளை திறப்பதற்கு அரசாங்கம் அண்மையில் அனுமதி வழங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.

இந்த உரிமங்களில் ஒன்று, எதிர்க்கட்சி உறுப்பினர் ஒருவரின் தலையீட்டின் மூலம் அவரது தனிப்பட்ட பாதுகாப்பு அதிகாரியின் மனைவி பெயரில் பெறப்பட்டதாக தெரியவருகிறது.

இது தொடர்பில் அந்த தலைவர்கள் மற்றும் சிவில் அமைப்புக்கள் எதிர்கட்சி தலைவர் சஜித் பிரேமதாசவை நேரில் சந்தித்து முறைப்பாடு செய்துள்ளனர்.

இதனால், மதுபான அனுமதிப்பத்திரத்தை உடனடியாக அரசாங்கத்திடம் கையளிக்குமாறு எதிர்க்கட்சித் தலைவர் உறுப்பினரிடம் தெரிவித்த போதிலும், அதற்கும் அவர் செவிசாய்க்கவில்லை எனத் தெரிவிக்கப்படுகிறது.

அதேவேளை புதிய மதுபானசாலைகளை திறப்பது தொடர்பில் பதுளை ரிதிமாலியத்தே பிரதேச மக்கள் அரசாங்கத்திற்கு எதிராக கடும் எதிர்ப்பை வெளியிட்டுள்ளனர்.

இதேவேளை, தமது அரசாங்கத்தின் கீழ் புதிதாக வழங்கப்பட்ட மதுபான அனுமதிப்பத்திரங்கள் அனைத்தும் இரத்துச் செய்யப்படுவதாகவும், தேர்தல் அறிவிக்கப்படவுள்ள இந்த நேரத்தில் மதுபான உரிமங்களை வழங்கிய அதிகாரிகளுக்கு எதிராக நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச அண்மையில் தெரிவித்திருந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News