யாழ்ப்பாணம் போதனா வைத்தியசாலையில் உள்ள குருதி வங்கிப் பிரிவில் ‘ஓ பொசிட்டிவ்’ வகை குருதிக்குத் தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக அந்த வைத்தியசாலையின் குருதி வங்கிப் பிரிவினர் தெரிவித்துள்ளனர்.
அத்துடன் ஓ பொசிட்டிவ் குருதி வகை உடையவர்கள் குருதித்தானம் செய்வதன் மூலம் இந்தப் பற்றாக்குறையை நிவர்த்தித்துக் கொள்ளமுடியும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.