Search
Close this search box.
ஜனாதிபதித் தேர்தல் நிச்சயமாக நடத்தப்படும்!

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட முன்வந்திருக்கும் எந்தவொரு வேட்பாளரும் நிறைவேற்று அதிகாரத்தை இரத்துச் செய்வதாக கூறவில்லை என ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க தெரிவித்தார்.

நிறைவேற்று ஜனாதிபதி முறைமை சாதக, பாதக அம்சங்களுடன் கூடியதாகவே காணப்படுவதாகவும், ஜனாதிபதிக்கு உள்ள நிறைவேற்று அதிகாரத்தினாலேயே இலங்கையின் பொருளாதாரத்தை முன்னேற்றவும் 30 வருட யுத்தத்தை வெற்றிகொள்ளவும் முடிந்ததுள்ளது என்றும் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க சுட்டிக்காட்டினார்.

இளம் சட்டத்தரணிகளுடன் நடைபெற்ற What’s New சட்ட மறுசீரமைப்பு தொடர்பில் நேற்று (28) ஜனாதிபதி அலுவலகத்தில் நடைபெற்ற செயலமர்வில் கலந்துகொண்டிருந்த போதே ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்க இதனைத் தெரிவித்தார்.

ஜனாதிபதி பாராளுமன்றத்திற்கு பொறுப்புக்கூறும் வகையில் சட்டத்தை நிறைவேற்றிக்கொள்ள வேண்டும் என்றும் தற்போது நிறைவேற்று அதிகாரத்தின் பல பிரிவுகள் மாகாண சபைகளுக்கும் பாராளுமன்ற துறைசார் மேற்பார்வை குழுக்களுக்கும் பகிர்ந்தளிக்கப்பட்டுள்ளதாகவும் சுட்டிக்காட்டிய ஜனாதிபதி, எதிர்காலத்தில் ஜனாதிபதியின், அதிகாரங்களை பாராளுமன்றத்திற்கு பகிர்ந்தளிப்பதற்கான சட்டமொன்றை நிறைவேற்றவிருப்பதாகவும் தெரிவித்தார்.

எதிர்வரும் நாட்களில் ஜனாதிபதித் தேர்தலொன்று நிச்சயமாக நடத்தப்படும் என்றும், அதற்கான நிதி ஒதுக்கீடுகள் ஏற்கனவே மேற்கொள்ளப்பட்டிருப்பதாகவும் ஜனாதிபதி தெரிவித்தார்.

Sharing is caring

More News