கூரிய ஆயுதமொன்றினால் தாக்கப்பட்டு குடும்ப பெண்ணொருவர் படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இச் சம்பவம் பாதுக்க, வத்தரக பிரதேசத்தில் இன்று(29) காலை இடம்பெற்றுள்ளது.
இச்சம்பவம் தொடர்பில் மேலும் தெரியவருவதாவது,
பாதுக்க வத்தரக பிரதேசத்தில் வசிக்கும் பெண்ணொருவர் இன்று காலை தனது வீட்டின் முன் அறைக்கு சென்ற போது மர்ம நபரொருவர் திடீரென குறித்த பெண் மீது கூரிய ஆயுதத்தால் தாக்குதல் நடாத்திவிட்டு தப்பிச்சென்றுள்ளார்.
குறித்த தாக்குதலில் படுகாயமடைந்த பெண் உடனடியாக பாதுக்க மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டு மேலதிக சிகிச்சைக்காக ஹோமாகம ஆதார வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட பின்னர் உயிரிழந்துள்ளதாக மெகொட பொலிஸார் தெரிவித்தனர்.
வத்தரக, பாதுக்க பிரதேசத்தை சேர்ந்த 65 வயதுடைய ஒரு பிள்ளையின் தாயே இவ்வாறு படுகொலை செய்யப்பட்டுள்ளார்.
இதேவேளை குறித்த சம்பவத்துடன் தொடர்புடைய சந்தேகநபர் இதுவரை கைது செய்யப்படவில்லை என்பதுடன், சம்பவம் தொடர்பான மேலதிக விசாரணைகளை மெகொட பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.