கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் சமய நிகழ்வுகள் தவிர்ந்த ஏனைய நிகழ்வுகளை ஏற்பாடு செய்ய தடை விதிக்கப்பட்டுள்ள நிலையில், அரசியல் பலம் பெற்ற சில குழுவினர் பலவந்தமாக கேளிக்கை விளையாட்டுக்கள் அடங்கிய திருவிழாவை நடாத்தி வருவதாக துறைமுக வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
இந்த விழாவை உடனடியாக நிறுத்துமாறு இலங்கை துறைமுக முகாமைத்துவ மற்றும் ஆலோசனை சேவைகள் நிறுவனம் கொழும்பு காலி முகத்திடல் ஏற்பாட்டாளர்களுக்கு அறிவித்துள்ளது.
காலி முகத்திடல் மைதானத்தை சமய விழாவிற்காக முன்பதிவு செய்வதற்காக 45 இலட்சம் ரூபா வழங்கப்பட்டுள்ளதாகவும்,
ஆனால் ஏற்பாட்டாளர்கள் சுமார் இருபது இலட்சம் ரூபாவையே குறித்த நிறுவனத்திற்கு இதுவரை செலுத்தியுள்ளதாக தெரியவருகின்றது.
அரகலய போராட்டத்தின் பின்னர் கொழும்பு காலி முகத்திடல் மைதானத்தில் மத நிகழ்வுகள் தவிர வேறு எந்த நிகழ்வுக்கும் இடமளிக்க வேண்டாம் என அமைச்சரவை தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.