2023 ஆம் ஆண்டிற்கான கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை பெறுபேறுகள் இந்த வார இறுதியில் வெளியிடப்படும் என பரீட்சை திணைக்கள வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.
அதேவேளை பரீட்சை பெறுபேறுகளை வெளியிடும் நடவடிக்கைகள் தற்போது இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளதாக அந்த வட்டாரங்கள் மேலும் தெரிவிக்கின்றன.
கல்வி பொதுத்தராதர உயர்தரப் பரீட்சை 281,445 பாடசாலை விண்ணப்பதாரர்களும் 65, 531 தனியார் விண்ணப்பதாரர்களும் உயர்தரப் பரீட்சைக்கு தோற்றியிருந்ததாக தெரிவிக்கப்படுகிறது.
அதேவேளை இன்று அல்லது நாளை பெறுபேறுகள் வெளியாகும் என்ற சமூக வலைத்தளங்களில் வெளியிடப்படும் உறுதிப்படுத்தப்படாத தகவல்களை நம்ப வேண்டாம் என பரீட்சைகள் திணைக்களம் மேலும் தெரிவித்துள்ளது.