Search
Close this search box.
இலங்கையில் உயிரிழந்த பிரான்ஸ் தூதுவர்: எடுக்கப்படவுள்ள இறுதி முடிவு

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவரின் மரணம்  தொடர்பில் இறுதி முடிவு எடுக்கப்படவில்லை என பிரான்ஸ் தூதரகம் தெரிவித்துள்ளது.

அவரது இறுதிக் கிரியைகள் இலங்கையில் நடைபெறுமா இல்லாவிட்டால் சடலம் பிரான்ஸுக்கு எடுத்துச் செல்லப்படுமா என்பது குறித்து இன்று (27) இறுதித் தீர்மானம் எடுக்கப்படும் என தூதரக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

இலங்கைக்கான பிரான்ஸ் தூதுவர் ஜீன் ஃபிராங்கோயிஸ் பேக்டெட் ( Jean Francois Pactet) நேற்று (26) பிற்பகல் இராஜகிரியில் உள்ள அவரது உத்தியோகபூர்வ இல்லத்தில் வெலிக்கடை காவல்துறை அதிகாரிகள் குழுவினால் சடலமாக மீட்கப்பட்டார்.

அதன்படி, திடீர் சுகவீனம் காரணமாக அவர் உயிரிழந்துள்ளதாக காவல்துறையினர் தெரிவித்துள்ளனர்.

இந்த நிலையில், 1970 இல் பிறந்த  Jean Francois Pactet, ஒக்டோபர் 2022 முதல் இலங்கை  மற்றும் மாலத்தீவுகளுக்கான பிரான்ஸ் தூதுவராக இருந்து வந்தமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News