Search
Close this search box.
அறிமுகப்படுத்தப்பட்டுள்ள கடுமையான விதிகள்: அதிர்ச்சியில் மக்கள்

சர்வாதிகார ஆட்சி நடத்தும் கிம் ஜாங்(kim jong un) உன் வடகொரியாவில்(North korea) சில கடுமையான விதிகளை அறிமுகம் செய்துள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.தன் நாட்டு மக்கள் மேற்கத்திய கலாசாரத்தைப் பின்பற்றக்கூடாது என கருதும் கிம், வடகொரியாவில் விவாகரத்துக்கு தடை விதித்துள்ளார்.

விவாகரத்து என்பது அசாதாரண நடத்தை என அவர் கருதுவதால் இந்த விதி அறிமுகப்டுத்தப்பட்டுள்ளதாகவும், விவாகரத்து செய்தோர், சமூக பிரச்சினையாக கருதப்படுவார்கள் என உள்ளூர் ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

வடகொரியாவிலுள்ள அதிகாரிகள் யாராவது விவாகரத்து செய்தால் அவர்களுக்கு பதவி உயர்வோ, முக்கிய பதவிகளோ கிடைக்காது என தெரிவிக்கப்பட்டுள்ளது.எனினும், விவாகரத்து செய்யும் பொதுமக்களுக்கான தண்டனை குறித்து எதுவும் தெரிவிக்கப்படவில்லை.

இளைஞர்களின் தொலைபேசிகளை சோதனையிடுவதற்கு அதிகாரிகளுக்கு வழங்கப்பட்டுள்ள அனுமதி வழங்கப்பட்டுள்ளமை கிம் விதித்துள்ள இரண்டாவது விதியாகும்.வடகொரிய இளைஞர்கள், தென் கொரியாவின் தாக்கத்துக்கு ஆளாகியுள்ளார்களா என்பதை அறிவதற்காகவே இந்த சோதனை என தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதாவது, தென் கொரிய மக்கள் மொழியைப் பயன்படுத்தும் விதத்தில் வடகொரிய மக்கள் பயன்படுத்தக்கூடாது என அறிவுறுத்தப்பட்டுள்ளது.

இந்த விதியை மீறுவோர் சித்திரவதை முகாம் அடைக்கப்பபடுவதோடு கடினமான வேலைகளைச் செய்ய வற்புறுத்தப்படுவார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News