Search
Close this search box.
3 பெண்களை வலைவீசி தேடி வரும் பொலிஸார்!

அம்பாறையில் (Ampara) திருட்டுச்சம்பவத்துடன் தொடர்புடையதாக சந்தேகிக்கப்படும் 3 பெண்கள் தொடர்பாக  காவல்துறையினர் தகவல் கோரியுள்ளனர்.

 

குறித்த பெண்கள் அம்பாறையில் உள்ள சந்தை ஒன்றில் அண்மைக்காலமாக திருட்டுச்செயற்பாடுகளில் ஈடுபட்டுள்ளதாக காவல்துறையினர் சந்தேகித்துள்ளனர்.

இந்த நிலையில், இவர்கள் தொடர்பில் தேடுதல் நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

இதனடிப்படையில், இவர்கள் தொடர்பில் ஏதேனும் தகவல் தெரிந்தால் அம்பாறை காவல் நிலைய குற்றப்புலனாய்வு பிரிவினருக்கு தெரிவிக்குமாறு பொதுமக்களிடம் கோரிக்கை விடுத்துள்ளனர்.

குறித்த தகவல்களை, 0718593256, 0772921071 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு அறிவிக்குமாறு அம்பாறை காவல்துறையினர் தெரிவித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.

Sharing is caring

More News