Search
Close this search box.
இன்னும் சில நாட்களில் மூன்றாம் உலக போர்…!

3-வது உலக போர் உருவாக வாய்ப்பு இருப்பதாக வல்லுனர்கள் பலரும் கணித்துள்ள நிலையில் இன்னும் சில நாட்களில்   அது சாத்தியம் என தற்போது இந்திய பிரபல ஜோதிடரும் கூறியுள்ளமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவின் அரியானாவை சேர்ந்த பிரபல ஜோதிடரான குசால் குமார் எபவரே 3 ஆம் உலகப்போர் தொடங்கவுள்ளதாக கூறியுள்ளார். ஏற்கனவே பாபா வாங்கா உள்ளிட்டவர்கள் கணித்த கணிப்புகள் அப்படியே நடைபெற்று வருவதாக சமூக வலைதளங்களில் பரபரப்பாக பேசப்படுகின்றது.

இந் நிலையில், இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் தொடங்க வாய்ப்புள்ளதாக இந்தியாவை சேர்ந்த பிரபல ஜோதிடர் ஒருவர் கணித்திருப்பது தற்போது பேசு பொருளாகி உள்ளது.

இது தொடர்பாக இந்திய ஜோதிடர் தனது வலைதள பக்கத்தில் கூறியிருப்பதாவது,

2024-ல் உலகெங்கிலும் நடைபெறும் போர் பதற்ற சூழ்நிலைகளே இதை கணிக்க கூடியதாக உள்ளது. கொரியா நாடுகள், சீனா-தைவான், மத்திய கிழக்கு போன்ற போர் பதற்றம் உள்ளிட்ட செய்திகளும், இஸ்ரேல், காசா போரும் இதற்கு உதாரணமான கணிப்பை தருகின்றன.

அதுமட்டுமல்லாது  மத்திய கிழக்கு மற்றும் உக்ரைன்-ரஷியா போர் உள்ளிட்டவையும் நேட்டோ நாடுகளின் கோபமும் வெளிப்படும். சில நாடுகளில் ஆட்சி அதிகாரம் பெற்ற சிலர் பெரும் கவலைக்குரிய சூழ்நிலையை எதிர்கொள்வார்கள்.

சிலர் கடுமையான உடல் நிலையால் பாதிக்கப்படலாம் அல்லது ராஜினாமா செய்ய நேரிடலாம். அதே நேரத்தில் இன்னும் சில நாடுகளின் அரசியல் எழுச்சி ஏற்படலாம்.

அதை தடுக்க ராணுவம் கொண்டு வரப்படலாம். இதனால் இன்னும் சில வாரங்களில் 3-வது உலக போர் நடைபெற வாய்ப்பு உள்ளது. ஜூன் 18 ஆம் திகதிக்கு பிறகு 3-வது உலக போரை தூண்டுதலுக்கான சாத்திய கூறுகள் உள்ளன.

அதற்கு முன்னதாக ஜூன் 10 ஆம் திகதி, அல்லது 29 ஆம் திகதியோ கூட நிகழ வாய்ப்பு உள்ளதாகவும் குறித்த ஜோதிடர் தனது வலைதள பக்கத்தில் கூறியுள்ளமை 3 ஆம் உலகப்போர் குறித்த அச்சத்தை இன்னும் அதிகமாக்கியுள்ளது.

Sharing is caring

More News