Search
Close this search box.
இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரிப்பு : சுட்டிக்காட்டிய உலக உணவுத் திட்டம்

இலங்கையின் பெருந்தோட்ட பகுதிகளில் உணவு பாதுகாப்பின்மை அதிகரித்துள்ளதாக உலக உணவுத் திட்டம் தெரிவித்துள்ளது.

இதனடிப்படையில், 2023 ஆம் ஆண்டில் இலங்கையில் அதிக உணவு பாதுகாப்பின்மை வீதம் பெருந்தோட்ட பகுதிகளில் பதிவாகியுள்ளதாக உலக உணவுத் திட்டம் சுட்டிக்காட்டியுள்ளது.

உலக உணவுத் திட்டம் தனது 2023 ஆண்டுக்கான வீட்டு உணவுப் பாதுகாப்பு தொடர்பான மதிப்பீட்டு அறிக்கையை மாதிரிக் குடும்பங்களின் அடிப்படையில் வெளியிட்டுள்ளது.

இந்த நிலையில், கடந்த ஆண்டில் 24% குடும்பங்கள் மட்டளவில் உணவுப் பாதுகாப்பின்மையை எதிர்கொண்டிருந்ததாக அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வீதம் மார்ச் மாதத்தில் 17% ஆக காணப்பட்டதுடன் ஒகஸ்ட் தொடக்கம் செப்டம்பர் வரையான காலப்பகுதியில் 24% வரை அதிகரித்துள்ளது.

Sharing is caring

More News