Search
Close this search box.
யாழிற்கு விஜயம் மேற்கொண்ட ஜனாதிபதி ரணில்…!

வடக்கு மாகாணத்திற்கான மூன்று நாள் விஜயத்தை மேற்கொண்டுள்ள அதிபர் ரணில் விக்ரமசிங்க (Ranil Wickremesinghe) யாழ்ப்பாணத்தை வந்தடைந்துள்ளார்.

இன்று (24) காலை உலங்கு வானூர்தி மூலம் யாழ்ப்பாணம் மத்திய கல்லூரி மைதானத்தில் வந்திறங்கியுள்ளார்.

அதிபர் ரணிலை அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா, முன்னாள் இராஜாங்க அமைச்சர் விஜயகலா மகேஸ்வரன் ஆகியோர் வரவேற்றனர்.
அதிபர் ரணில் யாழ்ப்பாணப் பல்கலைக்கழக மருத்துவ பீட கட்டிடத்தை திறந்துவைப்பதுடன், துரையப்பா விளையாட்டரங்கில் நடைபெறும் இளைஞர் சேவை மன்ற நிகழ்வு, தந்தை செல்வா கலையரங்கில் நடைபெறும் ஆசிரியர் நியமன நிகழ்விலும் கலந்துகொள்கிறார்.
இதேவேளை அதிபரின் வடக்கு விஜயத்தை முன்னிட்டு யாழ் நகரில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
Sharing is caring

More News